நீங்கள் வேறு ஒரு மாநிலத்திற்கோ அல்லது நாட்டிற்கோ செல்லும் போது, புதுப்புது அனுபவங்கள் கிடைத்திருக்கும். சில விஷயங்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்திருக்கும். அதே போல் நம் கதாநாயகன், தான் அமெரிக்கா சென்றபோது தான் பார்த்த விஷயங்களை, தன் சக பயணியிடம் நகைச்சுவை கலந்து பகிர்கின்றான். ஏன்? சக பயணி ஒரு பிரபல பதிப்பகத்திற்கு வேண்டப்பட்ட ஒரு பெண். இவள் மூலம் தன் கதையை ஒரு புத்தகமாக வெளியிட முடியும்.
21 ஆம் நூற்றாண்டின் முதல் நாள்.
கணினி பொறியாளரான நமது கதாநாயகன் உலகை ஆட்டி வைத்துக்கொண்டு இருந்த Y 2 k என்னும் ஒரு கணினி பிரச்சனையை எப்படி சரி செய்தான் என்பதை ஒரு கதை வடிவில் அவளுக்கு சொல்ல நினைக்கின்றான். இப்படி ஒரு கதையை அவள் விரும்புவாளா? சொல்லித்தான் பார்க்க வேண்டும். எப்படி பட்ட கதையாக இருந்தாலும் அதை சுவாரஸ்யமாக சொல்வதில் தான் அதன் வெற்றி இருக்கின்றது என்று அவனது தோழி சொன்னதை நினைவு கூர்ந்து தான் மேற்கொண்ட வாழ்க்கை பயணத்தை நகைச்சுவை கலந்து பகிர்கின்றான். அவன் சொல்லும் கதை என்ன? அவள் இந்த கதையை விரும்பி தனக்கு தெரிந்த பதிப்பகத்திற்கு பரிந்துரை செய்வாளா?
https://kindlescout.amazon.com/p/J630TU3L4VW7
இது Amazon னின் Kindle வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வலைத்தளம் இக்கதையின் ஒரு சிறு பாகத்தை மக்களுக்கு பகிர்ந்துள்ளது. இக்கதையை விரும்புகிறவர்கள் அதை பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு பலர் இக்கதையை பரிந்துரை செய்தால், அமேசான் நிறுவனம் இதனை தன் வெளியீட்டில் பதிப்பிடும். மேலும் இக்கதை பதிப்பீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், இத்தகைய கதையை பரிந்துரை செய்த உங்களுக்கு இந்த முழு மின்னணு புத்தகத்தை அமேசான் (Amazon ) இலவசமாக வழங்கும். இதை நீங்கள் உங்கள் கணினியிலோ அல்லது போனிலோ இலவசமாக படித்து மகிழலாம். பரிந்துரை செய்ய இன்னும் ஆறு நாட்கள் தான் இருக்கின்றது.
யாருக்கு என்ன லாபம்?
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பலர் இருப்பர். ஆனால் சர்வதேச பதிப்பகங்களில் வெளி வரும் இந்திய புத்தகங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதிலும் தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் குறைவு. தற்போது கூட இந்த தேர்தலில் போட்டியிடும் புத்தகங்களில் எத்தனை இந்திய புத்தகங்கள் என்று பாருங்கள். என் புத்தகத்தையும் சேர்த்து இரண்டு தான். ஆனால் இப்படி ஒரு வலைதளம் இருப்பது பல இந்தியர்களுக்கு தெரியாது. அதனாலோ ஏனோ, இது வரை நமது புத்தகங்கள் எதுவும் Amazon Kindle லில் அவர்கள் உதவியுடன் வெளி வந்ததாக தெரியவில்லை.
இத்தகைய பிரபலமான நிறுவனத்தின் பதிப்பகத்தில் எனது கதை வெளிவந்தால், எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
உங்களுக்கு ஒரு புதுமையான மற்றும் நகைச்சுவையான கதை படித்த ஒரு திருப்தி உண்டாகும். அரசியல் வாதிகளை போல் சொல்ல வேண்டும் என்றால், ஒரு பச்சை தமிழனுக்கும் ஒரு இந்தியனுக்கும் உலக மேடையில் ஒரு வாய்ப்பு கொடுத்ததாகவும் இருக்கும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கீழ் கண்ட வலைதளத்தில் எனது கதையின் சிறு பாகம் இடம் பெற்று இருக்கிறது. தாங்கள் அதை படித்து பார்த்து, பிடித்திருந்தால் 'Nominate' Buttonனை click செய்யுங்கள். உங்களது Amazon IDமற்றும் Password கேட்கும். நீங்கள் முன்னரே Amazon பயன் படுத்தி இருந்தால், வழக்கமாக கொடுக்கும் ID மற்றும் Password கொடுத்து உங்கள் பரிந்துரையை நிறைவேற்றலாம். அல்லது இதுவரை நீங்கள் Amazon பயன்படுத்த வில்லை என்றால் உங்கள் Email ID மூலம் எளிதில் Sign Up செய்து பரிந்துரைக்கலாம்.
பிறகு இந்த கதையில் என்ன பிடித்திருந்தது என்று சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும். அதை நீங்கள் நட்சத்திர குறியீட்டால் சொல்லலாம். நீங்கள் கதையை படிக்க மற்றும் பரிந்துரை செய்ய வேண்டிய இடம்: https://kindlescout.amazon.com/p/J630TU3L4VW7